தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் – ஜனவரி 11 முதல் 17 வரை
January 15 , 2024 467 days 670 0
கவனக்குறைவாக அல்லது பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் முதன்முதலில் 1989 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “சாலைப் பாதுகாப்பு நாயகர்களாக விளங்குதல்” என்பதாகும்.
இந்தியாவில், போக்குவரத்து விபத்து மூலமாக தோராயமாக ஒவ்வொரு மூன்றரை நிமிடங்களுக்கு ஒரு நபர் உயிரிழக்கிறார்.
இந்தியாவின் மிகச் சமீபத்தியச் சாலை விபத்துகள் தரவுகளின்படி, ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,264 சாலை விபத்துகள் மற்றும் 462 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.