TNPSC Thervupettagam

தேசிய சிறு சேமிப்புத் திட்டங்களில் மாற்றங்கள்

September 14 , 2024 16 days 45 0
  • தேசிய சிறு சேமிப்புத் திட்டங்களின் (NSS) கீழ், அஞ்சல் அலுவலகங்கள் மூலம் ஒழுங்கற்ற முறையில் திறக்கப்பட்ட சேமிப்பு கணக்குகளை ஒழுங்குமுறைப் படுத்தச் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை பொருளாதார விவகாரங்கள் துறையானது அறிமுகப் படுத்தியுள்ளது.
  • 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் தேதிக்கு முன்னதாக தொடங்கப்பட்ட NSS-87 கணக்குகளில், முதல் கணக்கு நடப்புத் திட்ட விகிதத்தையும், இரண்டாவது கணக்கு தற்போதைய தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு (POSA) திட்ட விகிதத்தையும் சேர்த்து நிலுவைத் தொகையில் 2 சதவீதத்தையும் பெறும்.
  • 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி முதல், இரண்டு கணக்குகளுக்கும் 0 % வட்டி வழங்கப்படும்.
  • ஒருவருக்கு இரண்டு கணக்குகளுக்கு மேல் இருந்தால், வட்டி எதுவும் வழங்கப்படாது; இருப்பினும், அசல் தொகை திருப்பித் தரப்படும்.
  • 18 வயதிற்குட்பட்டவர்கள் வயது பூர்த்தி அடையும் வரை POSA திட்டத்தின் கீழ் வட்டி வழங்கப் படும், பின்னர், பொருத்தமான வட்டி விகிதம் வழங்கப்படும்.
  • 18 வயது பூர்த்தியான பிறந்தநாளில் இருந்து தொகை முதிர்ச்சி கணக்கிடப்படும்.
  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட PPF கணக்குகளை வைத்திருந்தால், முதன்மைக் கணக்கில் வைப்புத் தொகையானது வருடாந்திர வரம்பிற்குள் இருந்தால் இத்திட்டத்தின் கீழான வட்டி விகிதத்தைப் பெறும்.
  • ஏதேனும் இரண்டாம் நிலை கணக்குகள் இருந்தால் அதன் இருப்புத் தொகையானது முதன்மைக் கணக்குடன் இணைக்கப்படும்.
  • அதிகப்படியான தொகைகள் 0% வட்டியுடன் திருப்பி அளிக்கப்படும்.
  • வசிப்பிட விவரங்கள் தேவைப்படாத PPF கணக்குகளைக் கொண்ட செயலில் உள்ள தற்போதைய வெளிநாடு வாழ இந்தியர்கள் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை POSA திட்டத்தின் வட்டியைப் பெறுவார்கள்.
  • இந்தத் தேதிக்குப் பிறகு, வட்டி 0% ஆக வழங்கப்படும்.
  • தாத்தா பாட்டிகளால் (சட்டப்பூர்வப் பாதுகாவலர்கள் அல்ல) தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரித்தி கணக்குகள் சட்டப் பூர்வப் பாதுகாவலர் அல்லது அவர்களது பெற்றோரைப் பாதுகாவலராக மாற்ற வேண்டும்.
  • இந்தத் திட்ட வழிகாட்டுதல்களை மீறி இரண்டு கணக்குகளுக்கு மேல் திறக்கப் பட்டால், கூடுதல் கணக்குகள் மூடப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்