TNPSC Thervupettagam

தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் – டிசம்பர் 18

December 21 , 2022 612 days 249 0
  • இந்தியாவிலுள்ள மதம், இனம், வர்க்கம் அல்லது மொழி சார்ந்த சிறுபான்மையினரின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.
  • மத்திய அரசானது, 1992 ஆம் ஆண்டு தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தின் கீழ் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தினை நிறுவியது.
  • இதைத் தொடர்ந்து, ஐந்து மதச் சமூகங்களும் நாடு முழுவதும் சிறுபான்மையினச் சமூகங்களாக இந்திய அரசிதழில் மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இந்த மதச் சமூகங்கள் முஸ்லிம்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஜோராஸ்ட்ரியர்கள் (பார்சி) ஆகியோர் ஆவர்.
  • 2014 ஆம் ஆண்டில் சிறுபான்மைச் சமூகங்களாகக் கருதப்படும் மதச் சமூகங்களின் பட்டியலில் சமணர்களும் சேர்க்கப்பட்டனர்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினமானது, "All in 4 Minority Rights" என்ற கருத்துருவினை மையமாகக் கொண்டு அனுசரிக்கப்பட்டது.
  • இது ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் 30 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வின் ஒரு பகுதியாகும்.
  • ஐக்கிய நாடுகள் சபையானது 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று மத அல்லது மொழியியல் அல்லது தேசிய அல்லது இனம் சார்ந்த சிறுபான்மையினருக்குச் சொந்தமான தனிநபர் உரிமைகள் பற்றிய ஒரு அறிக்கையை ஏற்றுக் கொண்டு வெளியிட்டது.
  • சிறுபான்மையினர் உரிமைகள் தினமானது, இந்தியாவில் சிறுபான்மையினருக்கான சுதந்திரம் மற்றும் சம வாய்ப்புகளுக்கான உரிமை ஆகியவற்றினை நிலை நிறுத்தச் செய்வதோடு, அவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்