TNPSC Thervupettagam

தேசிய சுகாதார முக்கியத்துவ திட்டம் 2017-24

December 4 , 2017 2420 days 768 0
  • 2030-ல் ஹெச்.ஐ.வியை அழிப்பதை நோக்கமாக கொண்ட தேசிய சுகாதார முக்கியத்துவத் திட்டம் 2017-24-ஐ மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலவாழ்வுத்துறை அமைச்சகம் துவங்கியுள்ளது.
  • உலக எய்ட்ஸ் தினமான டிசம்பர் 1 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • ஆன்டி-ரெட்ரோவைரல் சிகிச்சையின் (Anti-retroviral Therapy – ART) கீழ் கொண்டு வரப்பட வேண்டிய மற்றும் கொண்டுவரப்படத் தவறிய மக்களை பின் தொடர்வதற்காக சம்பார்க் (SAMPARK MISSION) எனும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
  • தேசிய ஆரோக்கிய முக்கியத்துவ திட்டம் 2017-24 ஆனது 90 : 90 : 90 உத்திகளின் இலக்குகளை அடைய உதவும். மேலும் இது 2030-ல் எய்ட்ஸ் தொற்றினை அழிப்பதற்கான விரைவு வழி உத்திகளை (Fast Track Strategies) நோக்கி சுகாதாரப் பங்கெடுப்பாளர்களுடன் இணைந்தும் செயல்படும்.
  • சம்பார்க் திட்டமானது எச்.ஐ.வி பாதிப்புடையவர்களை அடையாளம் காண்பதனை விரைவுபடுத்திட உதவும். அடையாளம் கண்ட பின் ART திட்டத்தினோடு இவர்கள் இணைக்கப்படுவர்.
  90 : 90 : 90 உத்திகள்
  • ஐ.நா.எய்ட்ஸ் ஒழிப்பு திட்டத்தின் (UNAIDS) புதிய ஹெச்.ஐ.வி சிகிச்சை திட்டமே 90 : 90 : 90 உத்திகளாகும்.
  • 2020-ல் ஹெச்.ஐ.வி நோய் தொற்றுடையர்களில் 90 சதவீதத்தினருக்கு நோய் கண்டறி சோதனை (diagnose) செய்தலும், ஹெச்.ஐ.வி நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 90 சதவீதத்தினருக்கு Anti-retroviral Therapy சிகிச்சை அளிப்பதையும், ART சிகிச்சை பெற்றவர்களில் 90 சதவீதத்தினருக்கு வைரல் மட்டுப்படுத்தல் சிகிச்சை அளித்தலையும் (viral suppression) 90 : 90 : 90 உத்திகள் நோக்கமாக கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்