சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், தேசிய சுகாதார வள களஞ்சியத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இது பொது மற்றும் தனியார் சுகாதார நிறுவனங்களின் தகவல்களை சேகரிப்பதற்காக நடத்தப்படும் நாட்டின் முதல் சுகாதார நிறுவனக் கணக்கெடுப்பாகும்.
வலுவான, தரப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான தகவல் தொழில்நுட்பம் வாய்ந்த இந்தியாவின் சுகாதார வளத்தினை உருவாக்குவதன் மூலம், பொதுமக்களுக்கான ஆதார அடிப்படையில் முடிவெடுத்தல் மற்றும் தளத்தினையும், வழங்குநர் மையங்களுக்கான சேவையையும் வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இந்தக் கணக்கெடுப்பானது புள்ளி விவரக் கணக்கெடுப்பு திட்டம், 2008-ன் கீழ் நடத்தப்பட்டது.