2021-22 ஆம் நிதியாண்டில், NHM திட்டமானது சுமார் 2.69 லட்சம் கூடுதல் சுகாதாரப் பணியாளர்களை ஈடுபடுத்த உதவியது.
கூடுதலாக, 90,740 சமூக சுகாதார அதிகாரிகள் (CHO) ஈடுபடுத்தப்பட்டனர்.
NHM திட்டத்தின் கீழ், பேறு காலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் (MMR) ஆனது 1990 ஆம் ஆண்டு முதல் 83% குறைந்துள்ளது என்ற நிலையில் இது 45% என்ற உலகளாவியச் சரிவினை விட அதிகமாகும்.
இதே போல், 2014 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 45 ஆக இருந்த 5 வயதிற்குட்ப்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் (U5MR) ஆனது, 2020 ஆம் ஆண்டில் சுமார் 32 ஆகக் குறைந்தது.
இறப்பு விகிதக் குறைப்பில் சுமார் 75% பதிவானதையடுத்து, 1990 ஆம் ஆண்டு முதல் இந்த உயிரிழப்பு விகிதம் ஆனது உலகளாவிய அளவில் 60% ஆகக் குறைக்கப்பட்டதை ஒப்பிடும் போது, இது அதிக சரிவைக் காட்டுகிறது.
2014 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 39 ஆக இருந்த பச்சிளம் குழந்தை உயிரிழப்பு விகிதம் (IMR) ஆனது, 2020 ஆம் ஆண்டில் 28 ஆகக் குறைந்தது.
மேலும், 2015 ஆம் ஆண்டில் 2.3 ஆக இருந்த மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) ஆனது, 2020 ஆம் ஆண்டில் 2.0 ஆகக் குறைந்தது.
2015 ஆம் ஆண்டில் 1,00,000 பேருக்கு 237 ஆக இருந்த காசநோய் பாதிப்பு ஆனது, 2023 ஆம் ஆண்டில் 195 ஆகக் குறைந்துள்ள அதே காலக் கட்டத்தில் 28 ஆக இருந்த அதனால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் ஆனது 22 ஆகக் குறைந்துள்ளது.
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021 ஆம் ஆண்டில் மலேரியா நோய் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் முறையே 13.28% மற்றும் 3.22% குறைந்துள்ளன.