TNPSC Thervupettagam

தேசிய சுற்றுலா விருதுகள் 2016 - 2017

October 4 , 2018 2147 days 707 0
  • மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரான K.J. அல்போன்ஸால் 2016-17 ஆம் ஆண்டிற்கான தேசிய சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டன.
  • மேலும் சுற்றுலாத்துறை அமைச்சர் “வியத்தகு இந்தியா அலைபேசி செயலி” மற்றும் “வியத்தகு இந்தியா சுற்றுலா உதவியாளர் நற்சான்றிதழ் திட்டம்” ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.
  • இந்த செயலியானது டெக் மகேந்திராவால் வடிவமைக்கப்பட்டது. மேலும் நிகழ்நேர சான்றிதழ் கற்றல் தளமானது “விப்ரோ” நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.

சிறந்த மாநிலம்/யூனியன் பிரதேசங்கள் - சுற்றுலாத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சி (இந்தியாவிலிருந்து)

  • முதல் பரிசு - ஆந்திரப் பிரதேசம்
  • இரண்டாவது பரிசு - கேரளா
  • மூன்றாவது பரிசு - இராஜஸ்தான் மற்றும் கோவா (இரு மாநிலங்களும் இணைந்து)

சிறந்த மாநிலம்/யூனியன் பிரதேசங்கள் - சுற்றுலாத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சி (ஜம்மு காஷ்மீர் மற்றும் சிக்கிம்)

  • சிக்கிம்

 சிறந்த பாரம்பரிய நகரம்

  • அகமதாபாத் மற்றும் மாண்டு (இரு நகரங்களும் இணைந்து)

 மிகவும் பொறுப்பு வாய்ந்த சுற்றுலாத் திட்டம் / முன் முயற்சி

  • வயநாடு, கேரளா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்