TNPSC Thervupettagam

தேசிய செவிலியர் மற்றும் பேறுகால மருத்துவப் பணியியல் ஆணையம் (NNMC) மசோதா, 2023

August 19 , 2023 338 days 154 0
  • இது 1947 ஆம் ஆண்டு இந்திய செவிலியர் சபை சட்டத்தினை ரத்து செய்கிறது.
  • செவிலியர் மற்றும் பேறுகால மருத்துவப் பணியியல் அல்லது மருத்துவத் தாதி நிபுணர்களுக்கான கல்வி மற்றும் சேவைகளின் தரங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேலாண்மைக்காக இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது.
  • இது தேசிய செவிலியர் மற்றும் பேறுகால மருத்துவப் பணியியல் ஆணையத்தினை நிறுவுவதற்கான விதிமுறைகளை வழங்குகிறது.
  • தேசிய ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் மூன்று தன்னாட்சி வாரியங்களை அமைக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
  • ஒவ்வொரு மாநிலச் சட்டத்தின் கீழ் இந்த வகையிலான ஆணையங்கள் நிறுவப்படாத மாநிலங்களில், அந்தந்த மாநில அரசாங்கங்கள் ஒரு மாநில தேசிய செவிலியர் மற்றும் பேறுகால மருத்துவப் பணியியல் ஆணையத்தை அமைக்க வேண்டும்.
  • நெறிமுறைகள் மற்றும் பதிவு வாரியமானது இயங்கலை வழியிலான இந்திய செவிலியர்கள் மற்றும் பேறுகால மருத்துவப் பணியியல் பதிவேட்டினை நிர்வகிக்கும்.
  • இதன் கீழ், மத்திய அரசு ஆனது செவிலியர் மற்றும் பேறுகால மருத்துவப் பணியியல் ஆலோசனைக் குழுவையும் அமைக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்