மியன்மாரின் இராணுவ அரசாங்கமானது, அதன் அரசியல் எதிரிகளை முடக்கச் செய்வதற்கான அதன் தொடர் பிரச்சாரத்தில் மற்றொரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது.
அடுத்து வரப்போகும் தேர்தலையொட்டிப் பதிவு செய்வதற்கு அளிக்கப்பட்ட காலக் கெடுவினைத் தாண்டியதால் முன்னதாகப் பதவி நீக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி உட்பட 40 எதிர்க்கட்சிகளை அது கலைத்துள்ளது.
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றது.
ஆனால் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களையும் பாராளுமன்றத்தில் அவர்களதுப் பொறுப்பினை ஏற்கவிடாமல் தடுத்து, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
தேசிய ஜனநாயகக் கட்சியானது, இராணுவ ஆட்சிக்கு எதிராக எழுந்த கிளர்ச்சி தோல்வியடைந்ததையடுத்து 1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.