16வது பெடரேசன் கோப்பை தேசிய ஜீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் துவங்கியுள்ளது.
கோவை மாவட்டம் இந்த சாம்பியன்ஷிப் போட்டியை முதன் முறையாக நடத்துகின்றது. தமிழ்நாடு தடகள சங்கம் (Tamil Nadu Athletic Association) இந்த போட்டியை நடத்துகின்றது.
3 நாட்கள் நடைபெறுகின்ற இந்த தேசிய ஜீனியர் தடகளப் போட்டியில் 16 முதல் 20 வயதுக்குட்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்பர்.
மேலும் இந்த தேசிய ஜீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது பின்வரும் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு இடமாகவும் (selection trial) செயல்படும்.
அவையாவன
கொழும்புவில் நடைபெற உள்ள 3வது தெற்காசிய ஜீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி.
ஜப்பான் நாட்டின் கிபூ நகரில் நடைபெற உள்ள 18-வது ஆசிய ஜீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி.
பின்லாந்து நாட்டின் தம்பேர் நகரில் நடைபெற உள்ள IAAF 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி.