TNPSC Thervupettagam

தேசிய ஜீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி

April 27 , 2018 2436 days 811 0
  • 16வது பெடரேசன் கோப்பை தேசிய ஜீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் துவங்கியுள்ளது.
  • கோவை மாவட்டம் இந்த சாம்பியன்ஷிப் போட்டியை முதன் முறையாக நடத்துகின்றது. தமிழ்நாடு தடகள சங்கம் (Tamil Nadu Athletic Association) இந்த போட்டியை நடத்துகின்றது.
  • 3 நாட்கள் நடைபெறுகின்ற இந்த தேசிய ஜீனியர் தடகளப் போட்டியில் 16 முதல் 20 வயதுக்குட்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்பர்.
  • மேலும் இந்த தேசிய ஜீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது பின்வரும் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு இடமாகவும் (selection trial) செயல்படும்.
  • அவையாவன
    • கொழும்புவில் நடைபெற உள்ள 3வது தெற்காசிய ஜீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி.
    • ஜப்பான் நாட்டின் கிபூ நகரில் நடைபெற உள்ள 18-வது ஆசிய ஜீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி.
    • பின்லாந்து நாட்டின் தம்பேர் நகரில் நடைபெற உள்ள IAAF 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்