TNPSC Thervupettagam

தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் 2018

January 24 , 2019 2135 days 647 0
  • டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் நடத்தப் பட்டது.
  • 80வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த G. சத்தியனை வீழ்த்தி அகந்தா சரத் கமல் (தமிழ்நாடு) வரலாறு படைத்துள்ளார். இவர் 9வது முறையாக இப்பட்டத்தை வென்றுள்ளார்.
  • தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் 8 முறை வென்ற கமலேஷ் மேத்தாவின் நீண்ட கால சாதனையை சரத் முறியடித்தார்.
  • கர்நாடகாவைச் சேர்ந்த அர்ச்சனா காமத் (18) மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கிருத்விகா சிங் ராயை வீழ்த்தி மூத்தோருக்கான ஒற்றையர் பிரிவில் தனது முதலாவது தேசிய பட்டத்தை வென்றுள்ளார்.
  • இதன்மூலம், 5 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற கர்நாடகாவைச் சேர்ந்த உஷா சுந்தர் ராஜ் என்பவருக்குப் பின்பு இப்பட்டத்தை வென்ற 2வது கர்நாடக வீராங்கனையாக அர்ச்சனா உருவெடுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்