தேசிய தலைநகரில் பிச்சையெடுத்தல் குற்றவிலக்களிக்கப்படுதல்
August 10 , 2018 2392 days 722 0
டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லிக்கும் நீட்டிக்கப்பட்ட 1959ம் ஆண்டு பம்பாய் பிச்சையெடுத்தல் தடுப்புச் சட்டத்தின் 25வது பிரிவை, சட்டவிரோதம் என்று அறிவித்திருக்கின்றது.
இதன் மூலம் தேசிய தலைநகரத்தில் பிச்சையெடுத்தலை குற்றமாகக் கருதும் சட்ட விதியை ரத்து செய்திருக்கின்றது.
பம்பாய் பிச்சையெடுத்தல் தடுப்புச் சட்டம் பிச்சையெடுத்தற்கான முதல் தண்டனைக்கு 3 மாதம் சிறைத் தண்டனையென்றும், தொடர்ச்சியான தண்டனைக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படுமென்றும் கூறுகின்றது.