அரசானது 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய தளவாடக் கொள்கையினை (NLP) அறிமுகப் படுத்தியுள்ளது.
இது 'விரைவான தொலைதூர விநியோகம்', போக்குவரத்து தொடர்பான சவால்களை முடிவுக்கு கொண்டு வருதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"தளவாடங்கள்" என்ற சொல்லானது, வளங்களைப் பெறுதல், சேமித்தல் மற்றும் அதற்குத் தொடர்புடைய குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்லுதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மொத்தச் செயல்முறையை விவரிக்கிறது.
செயல்முறை மறு வடிவமைப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பல்முனை சரக்குப் போக்குவரத்து போன்ற முக்கியப் பிரிவுகளில் இந்தக் கொள்கை கவனம் செலுத்துகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 முதல் 18 சதவீதம் வரை தளவாடச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய அளவுருக்களுக்கு நெருங்கிய மதிப்புகளுக்கு ஒப்ப தளவாடச் செலவினங்கள் பாதியாகக் குறைக்கப்பட வேண்டும்.
உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% ஆகும்.
அமெரிக்கா, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் போன்ற நாடுகள் குறைந்த தளவாடச் செலவினம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தைக் கொண்டுள்ளன.
தற்போதையச் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16% ஆகும்.
2030ஆம் ஆண்டிற்குள், தளவாடச் செயல்திறன் குறியீட்டின் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா இடம்பிடிக்க வேண்டும்.
2018 ஆம் ஆண்டில், இந்தியா தளவாடச் செயல்திறன் குறியீட்டில் 44வது இடத்தைப் பிடித்தது.