TNPSC Thervupettagam

தேசிய தளவாடக் கொள்கை 2022

September 23 , 2022 666 days 1356 0
  • அரசானது 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய தளவாடக் கொள்கையினை (NLP) அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது 'விரைவான தொலைதூர விநியோகம்', போக்குவரத்து தொடர்பான சவால்களை முடிவுக்கு கொண்டு வருதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • "தளவாடங்கள்" என்ற சொல்லானது, வளங்களைப் பெறுதல், சேமித்தல் மற்றும் அதற்குத் தொடர்புடைய குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்லுதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மொத்தச் செயல்முறையை விவரிக்கிறது.
  • செயல்முறை மறு வடிவமைப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பல்முனை சரக்குப் போக்குவரத்து போன்ற முக்கியப் பிரிவுகளில் இந்தக் கொள்கை கவனம் செலுத்துகிறது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 முதல் 18 சதவீதம் வரை தளவாடச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய அளவுருக்களுக்கு நெருங்கிய மதிப்புகளுக்கு ஒப்ப தளவாடச் செலவினங்கள் பாதியாகக் குறைக்கப்பட வேண்டும்.
  • உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% ஆகும்.
  • அமெரிக்கா, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் போன்ற நாடுகள் குறைந்த தளவாடச் செலவினம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தைக் கொண்டுள்ளன.
  • தற்போதையச் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16% ஆகும்.
  • 2030ஆம் ஆண்டிற்குள், தளவாடச் செயல்திறன் குறியீட்டின் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா இடம்பிடிக்க வேண்டும்.
  • 2018 ஆம் ஆண்டில், இந்தியா தளவாடச் செயல்திறன் குறியீட்டில் 44வது இடத்தைப் பிடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்