TNPSC Thervupettagam
February 21 , 2024 310 days 829 0
  • தேசிய திரைப்பட விருதுகளுக்கான முன்னொட்டுப் பெயரில் இருந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் மறைந்த நடிகை நர்கிஸ் தத் ஆகியோரின் பெயர்களை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (I&B) நீக்கியுள்ளது.
  • ‘சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது’ ஆனது, ‘சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது’ என்று அழைக்கப்படும்.
  • 1980 ஆம் ஆண்டில் நடைபெற்ற 28வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவின் போது இந்திரா அவர்களின் பெயர் இந்த விருதுடன் இணைக்கப் பட்டது.
  • தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்தத் திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது ஆனது தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப் படத்திற்கான விருது' என்று மாற்றப்பட்டுள்ளது.
  • நர்கிஸ் அவர்களின் பெயர் ஆனது 1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற 13வது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்தத் திரைப்படத்திற்கான விருதுடன் இணைக்கப் பட்டது.
  • தேசியத் திரைப்பட விருதுகள் ஆனது, முதன்முதலில் 1954 ஆம் ஆண்டில் இந்திய அரசால் வழங்கப்பட்டது.
  • இது "தேசிய அளவில் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா முழுவதும் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை கௌரவிப்பதை" நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்