தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு நிதி - மறுகட்டமைத்தல்
April 6 , 2018 2428 days 1425 0
மத்திய அமைச்சரவை தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு நிதி ஆகியவற்றை முறையாக அமல்படுத்தி கண்காணித்து, நிர்வகிக்க அதனை மறுகட்டமைத்திடுவதற்கான முன்மொழிவு ஒன்றை வழங்கியுள்ளது.
இந்த மறுகட்டமைதலுக்கான நோக்கம், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் சிறந்த பெரு நிறுவன நிர்வாகத் திறன் ஆகியவற்றை உறுதி செய்வதாகும். மேலும் இது தேசிய திறன் மேம்பாட்டு நிதியின் மேற்பார்வைப் பணியினையும் மேம்படுத்திடும்.
மேலும் இத்திட்டம் தேசிய திறன் மேம்பாட்டு நிதி மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகளின் மன்ற உள்ளடக்குதலையும் மறுகட்டமைப்பு செய்திட உதவும்.
தேசிய திறன் மேம்பாட்டு நிதி மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை மத்திய நிதி அமைச்சகத்தால் 2008 ஜூலை மாதம் உருவாக்கப்பட்டு, ஜனவரி 2009ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இது திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செம்மையான முறையில் நடைமுறைப்படுத்திட ஆரம்பிக்கப்பட்டது.
தேசிய திறன் மேம்பாட்டு நிதி, நாட்டில் திறன் மேம்பாட்டை ஊக்கப்படுத்தி தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் குறிப்பிடப்பட்ட இலக்குகளை அடைவதற்காக, தனது நிதியின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகையினை முழுமையாக உபயோகித்திட தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் முதலீட்டு மேலாண்மை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளது.