தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினம் - மே 21
May 26 , 2023
552 days
223
- இந்த நாள் தீவிரவாதத்தினை ஒழித்து அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தச் செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.
- முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் 1991 ஆம் ஆண்டில் இதே நாளில் தான் படுகொலை செய்யப்பட்டார்.
- இந்த ஆண்டு தீவிரவாத எதிர்ப்பு தினத்தில், ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினத்தை இந்தியா நினைவு கூருகிறது.
- 40 வயதில் பதவிக்கு வந்த அவர் இந்தியாவின் இளம் பிரதமர் ஆவார்.
- இந்தத் தினமானது 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதியன்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது.
- 10வது உலகப் பயங்கரவாதக் குறியீட்டின் படி தீவிரவாதத்தினால் அதிகம் பாதிக்கப் பட்ட 25 நாடுகளில் இந்தியா இடம் பெற்றுள்ளது.
- உலகளவில், 2022 ஆம் ஆண்டில் தீவிரவாதத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9% குறைந்து 6,701 ஆகக் குறைந்துள்ளது.
- 2021 ஆம் ஆண்டில் 5,463 ஆக இருந்த தீவிரவாத தாக்குதல்கள் 2022 ஆம் ஆண்டில் சுமார் 28% குறைந்து 3,955 ஆக குறைந்துள்ளது.
Post Views:
223