மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டு அமைச்சகமானது (Union Ministry of Environment, Forest and Climate Change) தேசிய தூய காற்று திட்டத்தின் (National Clean Air Programme - NCAP) முன் வரைவை வெளியிட்டுள்ளது.
விரிவான மற்றும் நம்பகமான தரவு தளத்தினிற்காக நாடு முழுவதும் சுற்றுப்புற காற்றின் தரத்தை கண்காணிப்பதற்கு திறனுடைய மற்றும் கைதேர்ந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு பிணைய அமைப்பை உருவாக்குவதும் அதனை மேம்படுத்துவது ம் தேசிய தூய காற்று திட்டத்தினுடைய நோக்கமாகும்.
இந்த திட்ட வரைவில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமானது தேசிய தூய காற்று திட்டத்தின் கீழ் நாட்டில் காற்று மாசுபாடுகளை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளின் தொகுப்பை வழங்கியுள்ளது.
அவையாவன:
காற்று தர கண்காணிப்பு அமைப்பு
தூசு மேலாண்மை மீது அறிவிப்புகளினை வெளியிடல்
காற்று தர முன்னறிவிப்பு அமைப்பு
உள்ளரங்க காற்று மாசுபாடு கண்காணிப்பு மற்றும் மேலாண்மை.
10 நகரங்களை கொண்ட சூப்பர் நெட்வோர்கை அமைத்தல்
காற்று மாசுபடலின் உண்மை நேர கண்காணிப்பிற்கு மாற்றுத் தொழில்நுட்பத்தை அடையாளம் காணல்.
காற்று மாசுபடலினால் உண்டாகும் சுகாதார தாக்கங்கள் குறித்த ஆய்வுகள்.
NACP திட்டத்தின் அமல்பாட்டின் மதிப்பாய்வு, மதிப்பீடு, சரிபார்ப்பிற்காக மூன்று கட்ட பொறிமுறையை அமைத்தல்.