TNPSC Thervupettagam

தேசிய தூய காற்று திட்டத்தின் வரைவு

April 26 , 2018 2408 days 921 0
  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டு அமைச்சகமானது (Union Ministry of Environment, Forest and Climate Change) தேசிய தூய காற்று திட்டத்தின் (National Clean Air Programme - NCAP) முன் வரைவை வெளியிட்டுள்ளது.
  • விரிவான மற்றும் நம்பகமான தரவு தளத்தினிற்காக நாடு முழுவதும் சுற்றுப்புற காற்றின் தரத்தை கண்காணிப்பதற்கு திறனுடைய மற்றும் கைதேர்ந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு பிணைய அமைப்பை உருவாக்குவதும் அதனை மேம்படுத்துவது ம் தேசிய தூய காற்று திட்டத்தினுடைய நோக்கமாகும்.
  • இந்த திட்ட வரைவில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமானது தேசிய தூய காற்று திட்டத்தின் கீழ் நாட்டில் காற்று மாசுபாடுகளை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளின் தொகுப்பை வழங்கியுள்ளது.
  • அவையாவன:
    • காற்று தர கண்காணிப்பு அமைப்பு
    • தூசு மேலாண்மை மீது அறிவிப்புகளினை வெளியிடல்
    • காற்று தர முன்னறிவிப்பு அமைப்பு
    • உள்ளரங்க காற்று மாசுபாடு கண்காணிப்பு மற்றும் மேலாண்மை.
    • 10 நகரங்களை கொண்ட சூப்பர் நெட்வோர்கை அமைத்தல்
    • காற்று மாசுபடலின் உண்மை நேர கண்காணிப்பிற்கு மாற்றுத் தொழில்நுட்பத்தை அடையாளம் காணல்.
    • காற்று மாசுபடலினால் உண்டாகும் சுகாதார தாக்கங்கள் குறித்த ஆய்வுகள்.
    • NACP திட்டத்தின் அமல்பாட்டின் மதிப்பாய்வு, மதிப்பீடு, சரிபார்ப்பிற்காக மூன்று கட்ட பொறிமுறையை அமைத்தல்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்