TNPSC Thervupettagam

தேசிய தூய்மை கங்கைத் திட்டம்

January 21 , 2020 1773 days 655 0
  • தேசிய தூய்மை கங்கைத் திட்டமானது (National Mission of Clean Ganga - NMCG) கங்கை நதிப் படுகையின் ஈர நிலங்களைப் பாதுகாக்க நமாமி கங்கா திட்டத்தின் கீழ் முயற்சி எடுத்துள்ளது.
  • ஈர நிலங்களானவை ஊட்டச்சத்துப் பொருட்களின் மறுசுழற்சி, வெள்ளம் & வறட்சிக் குறைப்பு, மேற்பரப்பு & நிலத்தடி நீர் மட்டத்தின் புதுப்பித்தல் ஆகியவற்றை வழங்குகின்றன.
  • NMCG ஆனது கங்கை நதியின் புத்துயிர்ப்பு, பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான தேசிய கங்கை ஆணையம் என்று குறிப்பிடப்படுகின்ற தேசிய ஆணையத்தின் செயல்படுத்தும் பிரிவு ஆகும்.
  • 1986 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட விதிகளின் கீழ் அமைக்கப்பட்ட தேசிய கங்கை நதிப் படுகை ஆணையத்தை 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தேசிய கங்கை ஆணையம் மாற்றி அமைத்து உள்ளது.
  • உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம் மற்றும் டெல்லி ஆகிய 11 மாநிலங்களை இந்தப் படுகை உள்ளடக்கியுள்ளது.
  • உலக வங்கியின் நிதியுதவி பெற்ற இந்த தேசிய கங்கை நதிப் படுகைத் திட்டங்களின் தற்போதைய கவனமானது கங்கை நதி பாய்கின்ற உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து முக்கிய மாநிலங்களில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்