மத்திய அரசின் தொழிற்நுட்ப மேம்பாட்டு ஆணையமானது (Technology Development Board) முன்னணி தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு (Bharat Biotech) அதனுடைய ரோட்டா வைரஸ் தடுப்பூசிக்காக (Rotavac vaccine) 2018-ஆம் ஆண்டிற்கான தேசிய தொழிற்நுட்ப விருதினை (National Technology Award) வழங்கியுள்ளது.
புத்தாக்கத் தொழில்நுட்பங்கள் (innovative technologies), வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டவை (successfully developed), மற்றும் இந்தியாவிலிருந்து வர்த்தகமயமாக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கான மிகவும் புகழ்மிக்க இந்த உயரிய விருதானது புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற தேசிய தொழிற்நுட்ப தின கொண்டாட்டத்தின் போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் வழங்கப்பட்டது.
2015-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ரோட்டா வைரஸ் தடுப்பூசியானது 2016-ஆம் ஆண்டு இந்தியாவின் உலகளாவிய நோய் தடுப்பூசித் திறனூட்டல் திட்டத்தில் (Universal Immunization Programme-UIP) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தினுடைய தொடக்கத்தின் கீழ் இந்த ரோட்டா வைரஸ் தடுப்பூசி பயன்பாடானது 9 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.