TNPSC Thervupettagam

தேசிய நகர்ப்புற வீட்டுவசதி நிதியம் (National Urban Housing Fund - NUHF)

February 28 , 2018 2464 days 745 0
  • மத்திய அமைச்சரவை , பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக 60,000 கோடி மதிப்பிலான தேசிய நகர்ப்புற வீட்டு வசதி நிதியத்தை (National Urban Housing Fund - NHUF) ஏற்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டமானது 2022-க்குள்2 கோடி வீடுகள் கட்டி முடிப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • NUHF ஆனது மூலப்பொருட்கள் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகத்தின் (Building materials and Technology Promotion Council - BMTP) கீழ் செயல்படும்.
  • NUHF ஆனது அடுத்த நான்கு ஆண்டுகளுக்குத் தேவையான நிதி வசதியை ஏற்படுத்தித் தரும்.
  • வெவ்வேறு வகையில் மத்திய நிதியுதவி தேவைப்படும் நிலைகள்
    • கூட்டு முயற்சியில் மலிவு விலை வீடுகள் (Affordable Housing in Partnership - AHP)
    • பயனாளிகள் இணைக்கப்பட்ட கட்டுமானம் (Beneficiary Linked Construction)
    • குடிசை மறுசீரமைப்பு (Insitu Slum Redevelopment)
    • மானியத்துடன் கடனளிப்புத் திட்டங்கள் (Credit Linked Subsidy Schemes)
  • இதன் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள வீடுள்ளவர்கள் மற்றும் வீடற்றவர்கள் ஆகியோருக்கு இடையே உள்ள இடைவெளியை, இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படுவதன் மூலம் படிப்படியாகக் குறைக்கலாம்.
  • மூலப்பொருள் உற்பத்தி மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டுக் கழகமானது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
  • இந்த அமைப்பானது சங்கங்கள் பதிவுச்சட்டம் (Societies Registration Act), 1860 –ன் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனுடைய முக்கியமான பணி, புதிய கட்டுமானத் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துவதேயாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்