தேசிய நிதி அறிக்கை ஆணையமானது (National Financial Reporting Authority - NFRA) 2017-18 ஆம் ஆண்டிற்கான IL & FS நிதியியல் சேவை நிறுவனத்தின் மீதான தனது முதல் தணிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கை இதுவாகும்.
NFRAக்கு முன்னதாக, IL & FS நிதியியல் சேவை நிறுவனத்தின் தணிக்கை அறிக்கையானது டெலாய்ட் ஹாஸ்கின்ஸ் அண்ட் செல்ஸ் (Deloitte Haskins and Sells - DHS) என்ற அமைப்பினால் மேற்கொள்ளப் பட்டது.
NFRA பற்றி
NFRA அமைப்பானது கணக்கியல் மற்றும் தணிக்கைத் தரங்களை நிறுவுதல் & அமல்படுத்துதல் மற்றும் தணிக்கையாளர்களின் பணிகளை மேற்பார்வை செய்தல் ஆகியவற்றுக்கான ஒரு அமைப்பு ஆகும்.
இது 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
NFRA நிறுவப்பட்டதன் காரணமாக, இந்தியா இப்போது சுயாதீன தணிக்கை கட்டுப்பாட்டாளர்களின் சர்வதேச மன்றத்தில் ஒரு உறுப்பினராக உள்ளது.