தேசிய நிதிச் செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையத்தின் முதலாவது தலைவர்
October 11 , 2018 2239 days 773 0
தேசிய நிதிச் செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையத்தின் (NFRA - National Financial Reporting Authority) முதலாவது தலைவராக முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான ரங்காச்சாரி ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 3 ஆண்டுகள் அல்லது 65 வயதை எட்டும் வரை NFRA-ன் தலைவராக செயல்படுவார்.
மேலும் தேசிய நிதிச் செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையத்தின் முழு நேரப் பணியாளராக பிரசென்ஜித் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
கணக்குத் தணிக்கையாளர்களை கண்காணிப்பதற்கான தனிச் சுதந்திர ஒழுங்குமுறை ஆணையமாக NFRA செயல்படும்.