தேசிய நிதிச்செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையத்தை (NFRA – National Financial Reporting Authority) அமைப்பதற்கான முன்மொழிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது 2013 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட (Companies Act – 2013) முக்கியமான மாற்றங்களுள் ஒன்றாகும்.
நிதி மீதான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பிரத்தியேக பரிந்துரையின் பெயரில் NFRA வை ஏற்படுத்த 2013 நிறுவனங்கள் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
தேசிய நிதிச் செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையமானது ஒரு தலைவர், ஒரு செயலர் மற்றும் மூன்று முழு நேர உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 15 பேரைக் கொண்ட குழுவாகும்.
தேசிய நிதிச் செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையத்தின் அதிகார வரம்புகள் :
பொது நலன்கள் சம்பந்தப்பட்டுள்ள வேளையில் பிற நிறுவனங்களையும் விசாரிக்குமாறு தேசிய நிதிச் செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையத்தை அரசு கோரலாம்.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அல்லது பட்டியலிடப்படாத பெரிய பொது நிறுவனங்களில் தணிக்கையை மேற்கொள்ளும் கணக்குத் தணிக்கையாளர்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்களையும் விசாரிக்கும் அதிகாரம் இதற்கு உண்டு.
நிதியியல் கணக்குத் தணிக்கையாளர்களை கண்காணிக்கும் மேற்பார்வையாளராக செயல்பட உள்ள தேசிய நிதிச் செயல்பாடுகள் கண்காணிப்பு ஆணையத்திடம் தவறிழைக்கும் கணக்குத் தணிக்கையாளர்களுக்கு (Chartered Accountants) எதிராக சட்டப் பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய கணக்குத் தணிக்கையாளர் நிறுவனத்தின் (Institute of Chartered Accounts of India-ICAI) அதிகாரமும் வழங்கப்படும்.