தேசிய நிறுவனங்கள் தரவரிசைக் கட்டமைப்பின் தரவரிசையில் தமிழகக் கல்லூரிகள்
July 22 , 2022 860 days 506 0
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கழகமானது ஒட்டு மொத்தப் பிரிவில் நாட்டின் சிறந்த உயர்கல்வி நிறுவனமாகத் தரநிலைப் படுத்தப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தப் பிரிவில், முதல் 200 கல்லூரிகளில் தமிழக மாநிலத்தைச் சேர்ந்த 38 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.
மாநில (பிரசிடென்சி) கல்லூரியானது, மூன்றாவது சிறந்த கல்லூரியாக மீண்டும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதில் லயோலா கல்லூரி நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
இதில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி 17வது இடத்தில் உள்ளது.
நான்கு மகளிர் கல்லூரிகள் – ராணி மேரி (47), எத்திராஜ் (65), மகளிர் கிறிஸ்டியன் (72) மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் (76) ஆகியவை முதல் 76 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
இந்திய நாட்டின் முதல் 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழக மாநிலத்தின் 73 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
நாட்டின் சிறந்தப் பொறியியல் நிறுவனங்களில் பதிமூன்று கல்லூரிகள் சென்னையில் உள்ளவையாகும்.
11 சிறந்த முதுகலை வணிக மேலாண்மை கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.