மத்திய அரசானது 15 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட உள்ள தேசிய நிலச்சரிவு இடர் குறைப்புத் திட்டத்திற்குத் தேவையான மொத்தம் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தக் குழுவானது, உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுமார் 139 கோடி ரூபாய், இமாச்சலப் பிரதேசத்திற்கு 139 கோடி ரூபாய், எட்டு வடகிழக்கு மாநிலங்களுக்கு 378 கோடி ரூபாய், மகாராஷ்டிராவிற்கு 100 கோடி ரூபாய், கர்நாடகா மாநிலத்திற்கு 72 கோடி ரூபாய், கேரளா மாநிலத்திற்கு 72 கோடி ரூபாய், தமிழக மாநிலத்திற்கு 50 கோடி ரூபாய், மேற்கு வங்காள மாநிலத்திற்கு 50 கோடி ரூபாய் என்று நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், பல்வேறு மாநிலங்களுக்கான பேரிடர் தணிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 1115.67 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளித்தது.