TNPSC Thervupettagam

தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பு தளம்

September 19 , 2023 307 days 204 0
  • உச்ச நீதிமன்றமானது தனது வழக்குத் தரவுகளை தேசிய நீதித்துறை தரவுக் கட்டமைப்பில் (NJDG) பதிவு செய்துள்ளது.
  • NJDG இணைய தளம் என்பது நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தொடங்கப் பட்ட, நிலுவையில் உள்ள மற்றும் தீர்க்கப்பட்ட வழக்குகள் தொடர்பான தரவுகளின் தேசிய அளவிலான களஞ்சியமாகும்.
  • இது இணைய வழி நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழான ஓர் இயங்கலை தளமாக உருவாக்கப் பட்ட 18,735 மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் உத்தரவுகள், தீர்ப்புகள் மற்றும் வழக்கு விவரங்களின் தரவுத் தளமாகும்.
  • இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், தரவுகள் ஆனது நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டு தாலுக்கா மட்டம் வரையிலான சிறு சிறு தரவுகளும் பதிவு செய்யப் படுகிறது.
  • NJDG ஆனது நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு, தீர்த்து அவற்றின் எண்ணிக்கையினைக் குறைப்பதற்கான ஒரு கண்காணிப்புச் செயற்கருவியாக செயல்படுகிறது.
  • இணைய வழி நீதிமன்றங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக NJDG கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • இது மத்திய அரசின் நிதியுதவி பெறும் ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்