TNPSC Thervupettagam

தேசிய நீர் தகவலியல் மையம்

May 20 , 2018 2255 days 752 0
  • விரிவான நீர் மூல ஆதாரங்களின் தரவினைப் பராமரிப்பதற்காக மத்திய நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகமானது (Ministry of Water Resources, River Development and Ganga Rejuvenation) தேசிய நீர் தகவலியல் மையம் (National Water Informatics Centre-NWIC) எனும் ஓர் மத்திய அமைப்பை நிறுவியுள்ளது.
  • மத்திய நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் கீழ் ஓர் துணை அலுவலகமாக (subordinate office) தேசிய நீர் தகவலியல் மையம் செயல்படும்.
  • இணைச் செயலாளர் அளவிலான அதிகாரி இந்த அமைப்பின் தலைவராவார்.
  • புவியியல் தகவல் அமைப்பு (geographic information system) இணையமேடையின் மீது இணையம் அடிப்படையிலான இந்தியாவின் நீர் மூல ஆதார தகவல் அமைப்பின் {India Water Resources Information System (India-WRIS)} மூலம் வகைப்படுத்தப்பட்ட தரவுகள் (classified data) தவிர்த்து, நாட்டின் நீர் குறித்த இன்றளவிலான (upto date) மற்றும் நம்பகமான தரவுகள் மற்றும் தகவல்களை அனைத்து குடிமக்களுக்கு தெரிவிப்பதும், அவர்களை அதிகாரப்படுத்துவதும் இதன் நோக்கங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்