TNPSC Thervupettagam

தேசிய நீர்வாழ் விலங்கு - தாய்லாந்து

February 9 , 2019 2118 days 913 0
  • தாய்லாந்து நாட்டின் நீர்வாழ் விலங்காக ‘சியாமீஸ் சண்டையிடும் மீன்’ என்ற இனத்தை அறிவிப்பதற்கான பரிந்துரைக்குத் தாய்லாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • தாய்லாந்தின் தேசிய அடையாளக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மீன் இனத்தை நீர்வாழ் விலங்காக ஏற்றுக் கொள்வதன் மூலம் தாய்லாந்து நாட்டின் கலாச்சாரப் பெருமையை அந்நடவடிக்கை ஊக்குவிக்கிறது.
  • தாய்லாந்து நாட்டின் சியாமிஸ் சண்டையிடும் மீனின் கலாச்சாரம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக அரசாங்கம் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • சியாமீஸ் சண்டையிடும் மீனானது அதன் வாழிடம், அந்த நாட்டிற்கான தனித்துவ இனம் மற்றும் தாய்லாந்துப் பொருளாதாரத்தின் முக்கிய விலங்கு என்பதால் அந்த இனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்