TNPSC Thervupettagam

தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் - டிசம்பர் 24

December 26 , 2022 607 days 309 0
  • 1986 ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவானது நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதா 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதியன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அமலுக்கு வந்தது.
  • இந்த நாளின் முக்கியத்துவத்தை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 24 ஆம் தேதி என்பது தேசிய நுகர்வோர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • இந்தச் சட்டத்தினை மேலும் மேம்படுத்துவதற்காக வேண்டி 1991, 1993 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மேலும் பல திருத்தங்கள் செய்யப் பட்டன.
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கு மாற்றாக, 2019 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தினை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
  • 2019 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமலுக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்