நாடெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று தேசிய நுகர்வோர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகமானது 2018 ஆம் ஆண்டின் தேசிய நுகர்வோர்கள் தினத்தை புது தில்லியில் உள்ள டிஆர்டிஓ பவனில் கொண்டாடியது (DRDO - The Defence Research and Development Organisation).
2018 ஆம் ஆண்டின் தேசிய நுகர்வோர்கள் தினத்தின் கருத்துருவானது, “நுகர்வோர்களின் புகார்களுக்கு குறித்த காலத்திற்குள் தீர்வு காணுதல்” என்பதாகும்.
1986 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி அன்று நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-ற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதன் காரணமாக டிசம்பர் 24 அன்று இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.