TNPSC Thervupettagam

தேசிய நெடுஞ்சாலைகள் முதலீடு மேம்பாடு

December 24 , 2017 2381 days 812 0
  • நெடுஞ்சாலைகள் திட்டங்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் முதலீட்டு மேம்பாட்டுக் கழகத்தை (National Highways Investment Promotion Cell - NHIPC) இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India - NHAI) உருவாக்கியுள்ளது.
  • சர்வதேச திட்ட முதலீட்டாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், திட்ட மேம்பாட்டாளர்கள் மற்றும் நிதி மேலாளர்கள் இந்திய நெடுஞ்சாலைகளின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் பங்குபெறுவதற்கான முயற்சிகளை இப்பிரிவு மேற்கொள்ளும்.
  • பாரத்மாலா திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 5,35,000 கோடி செலவில் 35,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலைகளை கட்டமைக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • இத்தகைய பெரும் திட்டங்களை நிறைவேற்ற பொது மற்றும் தனியார் துறைகளில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவு தேவைப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்