- சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டலத்தின் நிபுணர் உறுப்பினராக முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப் பட்டார்.
- தெற்கு மண்டல அமர்வில் பணியாற்றும் நிபுணர் உறுப்பினர் சைபல் தாஸ்குப்தா அவர்கள் கொல்கத்தாவில் உள்ள கிழக்கு மண்டல அமர்விற்கு அனுப்பப் பட்டுள்ளார்.
- இவர்கள் புதுடில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வால் நியமிக்கப் பட்டுள்ளனர்.
- இந்த நியமனத்திற்கு மத்திய அரசின் நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது ஒப்புதல் அளித்துள்ளது.
- இருப்பினும், இந்த நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- கிரிஜா வைத்தியநாதன் அவர்கள் நிர்வாக அனுபவம் பெற்றவர், ஆனால் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கையாள்வதில் அவருக்கு ஐந்து வருட அனுபவம் இல்லை என்று நீதிமன்றம் அவதானித்துள்ளது.
- மத்திய அரசில் அல்லது ஒரு மாநில அரசாங்கத்தில் சுற்றுச்சூழல் விஷயங்களை கையாள்வதில் ஐந்து ஆண்டுகள் உட்பட குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் நிர்வாக அனுபவத்தைக் கொண்டு இருக்க வேண்டும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சட்டம் பரிந்துரைக்கிறது.
- சுந்தர்ராஜன் தலைமையில் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து போராடும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான 'பூவுலகின் நண்பர்கள்', இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகியது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம்
- தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம், 2010 என்பது ஒரு இந்திய நாடாளுமன்றச் சட்டமாகும்.
- சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வேண்டி ஒரு சிறப்புத் தீர்ப்பாயத்தை உருவாக்க இது உதவுகிறது.
- இது இந்தியாவின் அரசியலமைப்பு ஏற்பாட்டில் இருந்து உத்வேகம் பெறுகிறது (சரத்து 21 - உயிருக்கும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு).
- சிவில் நடைமுறைகள், 1908 என்பதின் கீழ் ஏற்படுத்தப் பட்டுள்ள விதிமுறைக்குத் இந்த தீர்ப்பாயம் கட்டுப்படாது, மாறாக இயற்கை நீதிக்கான கொள்கைகளால் அது வழி நடத்தப்படும்.
- தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வானது புதுதில்லியில் உள்ளது.
- இது புனே (மேற்கு), போபால் (மத்திய), சென்னை (தெற்கு) மற்றும் கொல்கத்தா (கிழக்கு) ஆகிய இடங்களில் பிராந்திய அமர்வுகளைக் கொண்டுள்ளது.
- தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாவார்.
- தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஒவ்வோர் அமர்விலும் குறைந்தது ஒரு நீதித்துறை உறுப்பினர் மற்றும் ஒரு நிர்வாக நிபுணத்துவ உறுப்பினர் இருப்பர்.