qSPARC V2 தளத்தில் Rupay நுண்சில் தொடர்பு மற்றும் தொடர்பற்ற அட்டைகளை தயாரித்தல் மற்றும் தனிப்பயனாக்கம் செய்தவற்கான சான்றிதழை பெற்ற முதல் நிறுவனம் IDEMIA என்ற பிரான்சு நிறுவனம் ஆகும்.
இச்சான்றிதழ் எல்லா வித பணவழங்கீட்டு காட்சிகளையும் சோதனை செய்தபிறகு இந்திய தேசிய பணவழங்கீடு சங்கத்தினால் வழங்கப்படுகிறது.
qSPARC என்பது ஒற்றை அட்டையிலேயே 20 வரையிலான பணவழங்கீடு பயன்பாடுகளுடன் கூடிய பல்வேறு பணவழங்கீடு பயன்பாடுகளை ஏற்றும் வசதி உடைய திறந்த இடைமுக வளைய பணவழங்கீட்டு முறையாகும்.