TNPSC Thervupettagam

தேசிய பத்திரிக்கை தினம் – நவம்பர் 16

November 17 , 2017 2592 days 1006 0
  • நாடு முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் தேதி தேசிய பத்திரிக்கை தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவின் சுதந்திரமான மற்றும் பொறுப்புடைய பத்திரிக்கைத் துறையை அடையாளப்படுத்தும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவில் அச்சு ஊடகங்களை நெறிமுறைப்படுத்தும் அமைப்பான பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (Press Council of India) செயல்படத் தொடங்கிய நாளான நவம்பர் 16-ல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா முதலில் 1966-ஆம் ஆண்டு ஜீலை மாதம் 4-ஆம் தேதி நிறுவப்பட்டது.
  • பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவானது இந்திய பிரஸ் கவுன்சில் சட்டம் 1978-ன் (press council Act 1978) கீழ் உருவாக்கப்பட்ட ஓர் தன்னதிகாரமுடைய, சட்ட மற்றும் பகுதி – நீதி அமைப்பாகும்.
  • இருப்பினும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான J.R. முதோல்கரை தலைவராகக் கொண்டு 1996, நவம்பர் 16-ஆம் தேதிதான் இந்த அமைப்பு செயல்படத் துவங்கியது.
  • இது, இந்தியாவிலுள்ள அச்சு ஊடகங்கள் உயர்தர நிலைகளைப் பேணுகின்றனவா என உறுதி செய்யவும், அவை புற செல்வாக்கு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆட்படாமல் செயல்படுகின்றனவா என கண்காணிக்கவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்