TNPSC Thervupettagam

தேசிய பயணிகள் விடுதி நிலையங்கள்- அழகாக்குதல் போட்டி

May 13 , 2018 2421 days 807 0
  • மகாராஷ்டிராவிலுள்ள பல்லார்ஷா மற்றும் சந்திரபூர் ஆகிய ரயில் நிலையங்கள் தேசிய பயணிகள் விடுதி நிலையங்கள் அழகாக்குதல் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளன.
  • தடோபா தேசியப் பூங்காவிலுள்ள வனவிலங்குகள் மற்றும் உள்ளூர் பழங்குடியின கலைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் சுவரோவியங்கள் ஆகியவற்றால் மத்திய இரயில்வேயின் நாக்பூர் மண்டலம் தன்னுடைய மேற்கண்ட இரு ரயில் நிலையங்களையும் அழகுபடுத்தியுள்ளது.

  • இரண்டாம் இடத்தை பீகார் மாநிலத்தின் மதுபானி ரயில் நிலையம், தமிழ்நாட்டின் மதுரை ரயில் நிலையம் ஆகியவை பெற்றுள்ளன. இவ்விரு ரயில் நிலையங்களும் தங்களுடைய உள்ளூர் கலாச்சாரத்தின் பிரபலமான காட்சிகளை சித்தரித்துள்ளன.
  • மூன்றாம் பரிசு, மூன்று ரயில் நிலையங்களுக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
  • அவையாவன :
    • குஜராத்தின் காந்திதம்
    • ராஜஸ்தானின் கோட்டா
    • தெலுங்கானாவின் செகந்திராபாத்
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்