தேசிய பாதுகாவல் படையின் (NSG – National Security Guards) 33-வது நிறுவு தினம் அக்டோபர் 26 அன்று ஹரியானாவின் மனோசரில் கொண்டாடப்பட்டது.
உள்நாட்டு கலவரங்களுக்கு எதிராக நாட்டை பாதுகாக்கும் நோக்கோடு பயங்கரவாதிகளின் நடவடிக்கையை எதிர்ப்பதற்காக ஆப்ரேஷன் புளூ ஸ்டார் மற்றும் இந்திரா காந்தியின் படுகொலைக்கு அடுத்து 1984ல் இந்த படை உருவாக்கப்பட்டது.
கருப்பு நிற பூனையை சீருடையில் இலச்சினையாக கொண்டதாலும், கரும்பூனையை போல கருப்பு நிற உடை அணிவதாலும் பொதுவாக NSG படையினர் கருப்பு பூனைகள் என்றழைக்கப்படுவர்.
NSG ஓர் பலதரப்பட்ட பணிப்பொறுப்புகளை கொண்ட சிறப்பு பயிற்சியும், மிகுந்த திறமையையும், உந்துதல் உடைய படையாகும்.
பதன்கோட் தாக்குதல், அக்சர்தம் கையகப்படுத்துதல், மும்பை தாக்குதல் போன்றவற்றில் NSGன் பங்களிப்பு என்றும் நினைவு கூறத்தக்கது.