TNPSC Thervupettagam

தேசிய பால் தினம் - நவம்பர் 26

November 28 , 2018 2131 days 2086 0
  • தேசிய பால் தினம் (NMD - National Milk Day) ஆனது நவம்பர் 26 அன்று இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தையான டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்த நாளை குறிப்பதற்காக அனுசரிக்கப்படுகிறது. அவர் கோழிக்கோட்டில் 1921ஆம் ஆண்டு பிறந்தார்.
  • முதல் பால் தினமானது 26 நவம்பர் 2014 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • 1970-ல் தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியத்தால் (NDDB - National Dairy Development Board) தொடங்கப்பட்ட “வெண்மைப் புரட்சியின்” வடிவமைப்பாளர் டாக்டர் குரியன் ஆவார்.
  • இந்த திட்டமானது இந்தியாவை மிகப்பெரிய பால் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றுவதற்கு வழி வகுத்தது. தற்போது இந்தியா தனது பால் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தன்னிறைவு பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்