TNPSC Thervupettagam

தேசிய பால் வள தினம் – நவம்பர் 26

November 27 , 2017 2583 days 1155 0
  • நாடு முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தையான டாக்டர்.வர்கிஸ் குரியனின் பிறந்த நாளை குறிப்பிடும் விதமாக தேசிய பால் வள தினம் கொண்டாடப்படுகின்றது.
  • ஐ.நா. அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (Food and Agriculture) மேற்பார்வையின் கீழ் ஜீன்1-ல் கொண்டாடப்படும் உலக பால் வள தின அனுசரிப்பு போல இந்தியாவிலும் பால்வள தினம் கொண்டாடுவதற்கான யோசனை இந்திய பால் வள சங்கத்தால் உருவாக்கப்பட்டது.
  • தேசிய பால்வள மேம்பாட்டு கழகம் (National Dairy Development Board), இந்திய பால்வள கூட்டுறவு சங்கங்கள் (Indian Dairy Association) மற்றும் பல்வேறு மாநிலங்களின் பால் உற்பத்தி கூட்டமைப்புகளால் 2014ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் தேசிய பால்வள தினம் கடைபிடிக்கப்பட்டது.
  • உலக அளவில் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது.
  • உலகின் மொத்த பால் உற்பத்தி அளவில் 18.5% இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்