நாடு முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தையான டாக்டர்.வர்கிஸ் குரியனின் பிறந்த நாளை குறிப்பிடும் விதமாக தேசிய பால் வள தினம் கொண்டாடப்படுகின்றது.
ஐ.நா. அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (Food and Agriculture) மேற்பார்வையின் கீழ் ஜீன்1-ல் கொண்டாடப்படும் உலக பால் வள தின அனுசரிப்பு போல இந்தியாவிலும் பால்வள தினம் கொண்டாடுவதற்கான யோசனை இந்திய பால் வள சங்கத்தால் உருவாக்கப்பட்டது.
தேசிய பால்வள மேம்பாட்டு கழகம் (National Dairy Development Board), இந்திய பால்வள கூட்டுறவு சங்கங்கள் (Indian Dairy Association) மற்றும் பல்வேறு மாநிலங்களின் பால் உற்பத்தி கூட்டமைப்புகளால் 2014ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் தேசிய பால்வள தினம் கடைபிடிக்கப்பட்டது.
உலக அளவில் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது.
உலகின் மொத்த பால் உற்பத்தி அளவில் 18.5% இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றது.