TNPSC Thervupettagam

தேசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி

December 29 , 2021 934 days 426 0
  • பங்கஜ் அத்வானி தனது 11வது போட்டியில் வென்றதன் மூலம் தனது தேசிய பில்லியர்ட்ஸ் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
  • மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் துருவ் சித்வாலா என்பவரை இவர் தோற்கடித்தார்.
  • இவர் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணி சார்பாக இந்தப் போட்டியில் பங்கேற்றார்.
  • கியூ ஸ்போர்ட்ஸ் இந்தியா என்ற அமைப்பினால் 2021 ஆம் ஆண்டிற்கான 88வது தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்