தேசியப் புள்ளியியல் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29 அன்று சமூகப் பொருளாதார திட்டமிடுதல் மற்றும் திட்டம் இயற்றுதலில் புள்ளியியலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
2018-ன் கருத்துரு - “பணித்துறையின் புள்ளியல் தரத்திற்கான உத்திரவாதம்“ (Quality Assurance in official Statistics).
புள்ளியியல் துறை, புள்ளியியல் அமைப்பு மற்றும் பொருளாதாரத் திட்டமிடுதல் ஆகியத் துறைகளில் மறைந்த பேராசிரியர் பிரசாந்த சந்த்ரா மகல்நோபிஸ் அவர்களின் பங்களிப்பினை பறைசாற்றுவதற்காக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
1933-ல் இவர் இந்தியாவின் முதல் புள்ளியியல் பத்திரிக்கையான சங்க்யாவைத் தொடங்கினார். அதுமட்டுமின்றி மகல்நோபிஸ் தொலைவு (Mahalnobis Distance) என்ற புள்ளியியல் அளவையினைக் கண்டறிந்ததற்காகவும் இவர் நினைவு கூறப்படுகிறார்.
இவர் இந்தியப் புள்ளியில் நிறுவனத்தைத் தொடங்கினார். பெரிய அளவிலான மாதிரி ஆய்வுகளை வடிவமைக்க இவர் பெரும் பங்காற்றினார்.
மத்திய அரசாங்கமானது புள்ளியியல் துறையில் முன்னாள் பேராசிரியர் PC மகலநோபிஸீ-ன் குறிப்பிடத்தக்க பங்குகளை நினைவுகூறும் பொருட்டு ஜூன் 29-ஆம் தேதியை தேசிய புள்ளியியல் தினமாக அனுசரிக்கிறது.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் இந்தியப் பொருளாதாரத்தில் மகலநோபிஸின் கணித விளக்கங்களை நம்பியிருந்தது.
இந்த இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டமானது இந்தியாவில் கனரக தொழிற்சாலைகளை மேம்படுத்துவதை ஊக்குவித்தது. பின்னர் இது நேரு மகலநோபிஸ் மாதிரி அல்லது பொருளாதார வளர்ச்சியின் அடிப்படைத் தொழிற்சாலை யுக்தி என்று அழைக்கப்படுகிறது.