TNPSC Thervupettagam

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்

March 2 , 2023 507 days 373 0
  • தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த குஷ்பு சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • தேசிய மகளிர் ஆணையமானது 1990 ஆம் ஆண்டிற்கான தேசிய மகளிர் ஆணையச் சட்டத்தின் கீழ், 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • பெண்களுக்கான அரசியலமைப்புச் சார்ந்த மற்றும் சட்டப்பூர்வப் பாதுகாப்புகளை மதிப்பாய்வு செய்வதற்காக இந்த அமைப்பானது நிறுவப் பட்டது.
  • முதல் ஆணையமானது 1992 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதியன்று ஜெயந்தி பட் நாயக் அவர்களைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டது.
  • இந்த ஆணையமானது, ஒரு தலைவர், ஒரு உறுப்பினர் செயலாளர் மற்றும் மற்ற ஐந்து உறுப்பினர்கள் ஆகியோர் என குறைந்தபட்ச உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • திறன், நேர்மை மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றைக் கொண்ட நபர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்