இந்த நாள் இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடு அவர்களின் பிறந்தநாளை நினைவு கூறுகிறது.
ஆணாதிக்க இந்தியச் சமூகத்தில் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக சரோஜினி நாயுடு ஆற்றிய இணையற்றப் பங்களிப்பை இந்த நாள் கொண்டாடச் செய்கிறது.
இந்தத் தினமானது அவருடைய கலாச்சாரம், அரசியல் மற்றும் பொருளாதாரப் பங்களிப்பை அங்கீகரிக்கிறது.
அரசியலைத் தவிர, சரோஜினி நாயுடு அவர்கள், இந்திய இலக்கிய வரலாற்றில் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவராக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார்.
1925 ஆம் ஆண்டில், இந்தியத் தேசிய காங்கிரஸின் கட்சித் தலைவராக அந்த அமைப்பினை வழி நடத்திய முதல் பெண்மணி இவரே ஆவார்.
இந்தியாவில் பிளேக் தொற்றுநோய் பரவிய காலத்தில் சரோஜினி நாயுடு அவர்கள் ஆற்றியச் சேவைக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் ‘கைசர்-இ-ஹிந்த்’ பதக்கம் வழங்கிப் பாராட்டியது.