தேசிய மகளிர் தினம் - பிப்ரவரி 13
February 15 , 2025
7 days
93
- இந்தத் தினமானது சுதந்திரப் போராட்ட வீரர், சிறுமுது அறிஞர் மற்றும் கவிஞரான சரோஜினி நாயுடு அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
- இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அழைக்கப்படும் சரோஜினி நாயுடு அவர்கள் 1879 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதியன்று பிறந்தார்.
- 1925 ஆம் ஆண்டு இந்தியத் தேசிய காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணி ஆவார்.
- பின்னர், 1947 முதல் 1949 ஆம் ஆண்டு வரையில் ஐக்கிய மாகாணங்களின் முதல் பெண் ஆளுநராகவும் பணியாற்றினார்.
- 1929 ஆம் ஆண்டில், அவர் தென்னாப்பிரிக்க நாட்டில் கிழக்கு ஆப்பிரிக்க இந்திய காங்கிரஸுக்கு தலைமை தாங்கினார்.
- இந்தியாவில் பிளேக் தொற்றுநோயின் போது அவர் செய்த அரும்பெரும் பணிக்காக ஆங்கிலேயர்களால் அவருக்கு கைசர்-இ-ஹிந்த் பதக்கம் வழங்கப்பட்டது.
- அவரது முதல் கவிதைத் தொகுப்பான தி கோல்டன் த்ரெஷோல்ட் ஆனது 1905 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

Post Views:
93