அஸ்ஸாமின் தேசிய மக்கள் பதிவேட்டின் இறுதி வரைவை அஸ்ஸாம் மாநில அரசு வெளியிட்டுள்ளது.
இவ்வரைவின்படி, மொத்தமுள்ள 3.29 கோடி நபர்களில்9 கோடி மக்கள் தேசிய மக்கள் பதிவேட்டில் (National Register of Citizens) இடம் பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள் ஆவர்.
இவ்வரைவில் இடம்பெறாத 40.07 லட்சம் மக்கள் ‘சட்ட விரோதமாக குடி பெயர்ந்தவர்கள்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1951க்குப் பிறகு தேசிய மக்கள் பதிவேட்டை திருத்தும் முதல் மாநிலம் அஸ்ஸாம் ஆகும். இத்திருத்தமானது உண்மையான இந்திய மக்களின் பெயர்களை பட்டியலில் இணைப்பதற்காக மார்ச் 24, 1971 தேதி வரை தகுதிநிலையாகக் கொண்டு திருத்தப்படுகிறது.
முதலாவது தேசிய மக்கள் பதிவேடானது 1.9 கோடி மக்களின் பெயர்களுடன் இந்த வருடம் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1க்கு இடையிலான இரவில் வெளியிடப்பட்டது.