TNPSC Thervupettagam

தேசிய மஞ்சள் வாரியம்

January 18 , 2025 10 days 92 0
  • தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் தலைமையகத்துடன் கங்கா ரெட்டி என்பவரை அதன் முதல் தலைவராகக் கொண்டு தேசிய மஞ்சள் வாரியம் (NTB) ஆனது திறக்கப் பட்டுள்ளது.
  • 'தங்க மசாலா பொருள்' என்று அழைக்கப்படுகின்ற மஞ்சள் ஆனது, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், மேகாலயா மற்றும் பிற பகுதிகளில் பரவியுள்ளது.
  • NTB ஆனது அந்த மாநிலங்களின் நன்கு வருமானத்தை அதிகரிக்க உதவும் என்பதோடு, மேலும் அதிக உற்பத்தி வாய்ப்புகள் உள்ள பகுதிகளில் குறிப்பாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் அதன் உற்பத்தியை மிகவும் அதிகரிப்பதற்காக ஒரு நல்ல உத்வேகத்தை அளிக்கும்.
  • கடந்த ஆண்டு, நாட்டில் 3.05 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப் பட்டது.
  • மஞ்சள் உற்பத்தியானது 10.74 லட்சம் டன்கள் ஆக உள்ளது அல்லது உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
  • இந்தியாவில் 30 வகையான மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • உலக வர்த்தகத்தில் 62 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்ட உலகின் மிகப் பெரிய மஞ்சள் உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் ஒரு ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில், சுமார் 226.5 மில்லியன் டாலர் மதிப்பிலான 1.62 லட்சம் டன் மஞ்சள் மற்றும் மஞ்சள் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
  • இதில் NTB வாரியத்திற்கான நிதி மற்றும் உள்கட்டமைப்பை வழங்கும் தலைமைத் துறையாக வர்த்தக அமைச்சகம் விளங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்