TNPSC Thervupettagam

தேசிய மனித உரிமை நிறுவனங்களுக்கான உலகளாவியக் கூட்டணி

May 31 , 2023 419 days 228 0
  • உலகில் ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவியக் கூட்டணி (GANHRI) ஆனது இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC-இந்தியா) அங்கீகார வழங்கீட்டினை ஒத்தி வைத்து உள்ளது.
  • ஏழு மனித உரிமைக் கண்காணிப்பு நிறுவனங்கள்/நிறுவனங்கள் இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு வழங்கப்பட உள்ள ‘A’ தரவரிசையை எதிர்த்து GANHRI அமைப்பிற்கு கடிதம் அனுப்பப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த ஒரு நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • கடந்த பத்தாண்டுகளில் இந்த கையில் ஒரு ஒத்தி வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் படுவது இது இரண்டாவது முறையாகும்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பாரீஸ் கோட்பாடுகள், 1993 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள் இந்த ஒரு அங்கீகாரத்தினைப் பெறச் செய்வதற்காகப் பூர்த்தி செய்ய வேண்டிய ஆறு சர்வதேச முக்கியமான அளவுருக்களை அவை வழங்கச் செய்கின்றன.
  • தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணியானது அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா-பசிபிக் ஆகிய ஒவ்வொருப் பிராந்தியத்தில் இருந்தும் நான்கு ஆணையங்களுடன் பதினாறு ஆணையங்கள் 'A' தரநிலைப் பெற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையங்களைக் கொண்டுள்ளது.
  • 'A' தரநிலை என்ற ஒரு அங்கீகாரமானது, தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவியக் கூட்டணி மற்றும் மனித உரிமைகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிற அமைப்புகளின் பணி மற்றும் முடிவெடுத்தல்  என்ற செயல்முறையில் பங்கேற்பதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.
  • 1993 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப் பட்டது.
  • 1999 ஆம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையங்களுக்கான அங்கீகாரச் செயல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இது ‘A’ தரநிலை பெற்றத் தேசிய மனித உரிமைகள் ஆணையமாக அங்கீகரிக்கப்பட்டது.
  • இது 2006, 2011 மற்றும் 2017 ஆகிய சில ஆண்டுகளில் அதன் அங்கீகார வழங்கீடு ஒத்தி வைக்கப் பட்டதற்குப் பின் மீண்டும் தனது அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்